Mukkiya Thirumana Porutham | முக்கிய திருமண பொருத்தம்
திருமணம் ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமது முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். மேலும், திருமண பந்தத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்களாக இருந்தால் மட்டுமே, அவர்களால் அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கையை நடத்த முடியும் என்பதையும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். எனவே, அனைத்து வகையிலும் ஏற்றவாறு அமைந்த ஒரு ஆண், பெண்ணையே திருமண உறவில் இணைக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறிப்பாக இருந்தனர். இந்த உயரிய நோக்கத்தை அடைய, அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் துணை கொண்டனர். இதற்காக அந்த ஆண், பெண் இருவரது ஜாதகத்தையும் ஒத்திட்டுப் பார்த்து, அவர்களுக்கிடையே திருமணத்திற்கான பொருத்தம் உள்ளதா என ஆராய்ந்து அறிந்தனர். இவ்வாறான பொருத்தம் அமைந்திருந்தால் மட்டுமே, அவர்கள் அந்த ஜோடிக்குத் திருமணம் செய்தனர். இவ்வாறு, மண வயதில் உள்ள ஆண், பெண் இருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்து, அவர்களுக்கிடையே நிலவும் திருமணப் பொருத்தத்தைக் கண்டறிவதையே திருமணப் பொருத்தம் எங்கிறோம். இது ஜாதகப் பொருத்தம் எனவும் அழைக்கப்படுகிறது. திருமணப் பொருத்தம் இவ்வாறு பார்க்கப்படும் திரு...